கொரோனா பாதிப்பு எதிரொலி தாவரவியல் பூங்காவை சுற்றி பார்க்க ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி

ஊட்டி: கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் புல் மைதானங்களுக்குள் செல்லாமல் இருக்க புல் மைதானங்களை சுற்றிலும் தற்காலிக வேலி அமைக்கப்பட்டது. தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நீலகிரி மாவட்டத்திலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த வாரம் வரை நாள் ஒன்றுக்கு 5 முதல் 10 பேர் வரை மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்ேபாது நாள் தோறும் 25க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், வெளி மாவட்டங்களுக்கு சென்று திரும்புவர்களுக்கே பாதிப்பு அதிகமாக உள்ளது.

இதனை கட்டுப்பாடுத்த வெளியூர் செல்லும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருக்க நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் அதிகளவு சுற்றுலா பயணிகள் வரத் துவங்கியுள்ளனர். இதன் மூலமாகவும் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் அதிக நேரம் சுற்றுலா தலங்களில் வலம் வருவதை தவிர்க்க தோட்டக்கலைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் புல் மைதானங்களில் அமர்ந்து விளையாடுவது வழக்கம். கூட்டம் கூட்டமாக அமர்ந்து ஓய்வெடுப்பதும் வாடிக்கை.

இதனை கட்டுப்பாடுத்த பூங்காவிற்குள் ஒரு மணி நேரம் மட்டுமே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், புல் மைதானங்களில் அமர்ந்து விளையாடாமல் இருக்க அனைத்து புல் மைதானங்களும் மூடப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் புல் மைாதனங்களுக்குள் செல்லாமல் இருக்க தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முககவசம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் வெகு நேரம் பூங்காவில் இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Related Stories: