மலையாள புத்தாண்டை கொண்டாட தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் கேரளா சென்றார் நடிகை நயன்தாரா: ன்ஸ்டாகிராமில் வைரல் ஆகும் வீடியோ

திருவனந்தபுரம்: மலையாள புத்தாண்டை கொண்டாட விதமாக தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா கொச்சின் சென்றுள்ளார். பிரபல படத்தொகுப்பாளர் அப்பு என். பட்டாத்திரி இயக்கத்தில் மலையாளத்தில் நயன்தாரா நடித்துள்ள ’நிழல்’ படம் நேற்று வெளியானது. நயன்தாராவுக்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடித்துள்ள நிழல் வெளியானதிலிருந்து நல்ல விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது. இந்நிலையில், நயன்தாரா இன்று தனி விமானத்தில் கொச்சின் சென்றுள்ளார்.

இதன் வீடியோவை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தனது ன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார். கேரளாவில் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி மலையாள புத்தாண்டான விஷு பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே, விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையை தனி விமானத்தில் சென்று கொண்டாடினார்கள் என்பதால், மலையாள புத்தாண்டை கொண்டாட சென்றுள்ளனர். இதனை முடித்து வந்த பின்னர் ரஜினியின் அண்ணாத்த, விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ளவுள்ளார் என கூறப்படுகிறது.

Related Stories:

>