பல மடங்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு... உயரும் உயிரிழப்புகள்: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.52 கோடியை கடந்தது!!!

ஜெனீவா:சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13.52 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10.88 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 29.27 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 2.35 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.02 லட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அதிகபட்சமாக இந்தியாவில் கடந்த ஒரு நாளில் மட்டும் 1,44,829 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.3 கோடியை தாண்டியுள்ளது. அதேபோல நேற்று மட்டும் இந்தியாவில் கொரோனா காரணமாக 773 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,68,467ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவுக்கு அடுத்து, அமெரிக்காவில் நேற்று 83,405 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 903 பேர் உயிரிழந்துள்ளனர், இதுவரை அமெரிக்காவில் 3,18,00,809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல 5,74,814 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 89,090ஆகவும், உயிரிழப்பும் 3,647ஆகவும் பதிவாகியுள்ளது. அங்கு இதுவரை 1,33,75,414 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பிரேசிலில் 3,48,934 பேர் பலியாகியுள்ளனர்.

Related Stories: