ராமசாமி கோப்பை ஹாக்கி: ஐசிஎப் சாம்பியன்

சென்னை: என்.பி.வி.ராமசாமி கோப்பை ஹாக்கி தொடரில் ஐசிஎப் அணி சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை போரூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் என்.பி.வி.ராமிசாமி கோப்பை ஹாக்கிப் போட்டி நடந்தது. மொத்தம் 11 அணிகள்  களம் கண்டன. லீக் சுற்று முடிவில் நடந்த முதல் அரையிறுதியில் சேலஞ்சர்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில்  இந்தியன வங்கியை வென்றது. 2வது அரையிறுதி 1-1 என்ற கோல் கணக்கில் முடிய, ஐசிஎப் பெனால்டி ஷூட் அவுட்  முறையில் 4-3 என்ற கோல் கணக்கில்   ஐஓபி அணியை வீழ்த்தியது. நேற்று நடந்த பைனலில் ஐசிஎப் - சென்னை சேலஞ்சர்ஸ் ஹாக்கி அணிகள் விளையாடின. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில்   ஐசிஎப் 2-1   என்ற கோல் கணக்கில்  சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி ராமசாமி கோப்பையை கைப்பற்றியது.

ஐசிஎப் தரப்பில் ஷியாம், சுரேந்தர் ஆகியோரும், சேலஞ்சர்ஸ் தரப்பில் மகேந்திரனும் கோல் அடித்தனர். தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் தலைவரும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவருமான  நரிந்தர் பத்ரா, வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையை வழங்கினார். விழாவில் ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாசலம், பாஸ்கர் ஹாக்கி மைய இயக்குநர் ஒலிம்பியன் வி.பாஸ்கரன், தமிழ்நாடு ஹாக்கி சங்க தலைவர் அர்ஜுன்  ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: