பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் காலமானார்: பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு.!!!

பிரிட்டிஷ்: பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் உடல்நலக்குறைவால்(99)காலமானார். 1921 ஜூன் 10-ம் தேதி கிரீசில் உள்ள மான் ரெப்போஸ் என்ற ஊரில் பிறந்தவர் பிலிப். அவரது மாமா, கிரேக்க மன்னர் கான்ஸ்டன்டைன் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்குப் பிறகு, அவர் தனது பெற்றோர் மற்றும் நான்கு சகோதரிகளுடன் நாட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து பிரான்சில் குடியேறினார். கடந்த 1947-ம் ஆண்டு பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தை திருமணம் செய்ததை அடுத்து இங்கிலாந்து அரசக் குடும்பத்தில் ஒருவரானார் பிலிப்.

இதற்கிடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இளவரசர் பிலிப் லண்டனில் உள்ள கிங் எட்வர்டு மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் சேர்க்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, ஒரு மாதத்திற்குப் பிறகு வீடு திரும்பினார். அந்த நேரத்தில் அவருக்கு முன்பே இருந்த இருதய நிலை மற்றும் தொற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கு முன்பு 2019-ம் ஆண்டி டிசம்பர் மாதம் இதே எட்வர்டு மருத்துவமனையில் இளவரசர் பிலிப் 4 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த 2013 ஜூன் மாதம் வயிற்றில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் 2018-ம் ஆண்டு மற்றும் 2019 ஜனவரியில் இடுப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பிறகு பெரிய அளவிலான உடல்நலக்குறைவு எதுவும் அவருக்கு ஏற்படவில்லை.

இருப்பினும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக பிலிப் சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில், பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தின் கணவரும் எடின்பரோ கோமகனுமான பிலிப்ஸ் உடல்நலக்குறைவால் காலமானார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. பிலிப்-எலிசபெத் தம்பதிக்கு இளவரசர் சார்லஸ் உள்பட 3 மகன்கள், ஒரு மகள், 8 பேரன்கள் உள்ளனர். இளவரசர் பிலிப் மறைவிற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Related Stories: