இனி நகை வாங்குறது ரொம்ப கஷ்டம் தான் போல. விலை 176 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 35,000ஐ தாண்டியது... .

சென்னை: சென்னையில் இன்று தங்கம் விலை 176 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.  கொரோனா காரணமாக தொழில்துறை கடுமையான சரிவைச் சந்தித்தது. இதனால் பலரும் பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் பக்கம் திரும்பினார்கள். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது.  இதன் காரணமாகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தங்க விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது.இதனால் தங்க விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தது. இதற்கிடையே கடந்த மாதத்தில் மட்டும் 10 நாட்களுக்கு மேல் தங்கம் விலையில் சரிவு காணப்பட்டது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 3வது நாளாகத் தங்கம் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்.

சென்னையில் இன்று (ஏப்ரல் 9) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,387 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 22  ரூபாய் உயர்ந்துள்ளது.

அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 176 ரூபாய் உயர்ந்து 35,096 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை இன்று ரூ.72.10 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 72,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: