நீலி வடவம்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து நைசாக அரைக்கவும். ஜவ்வரிசியை 3 மணி நேரமும், புழுங்கல் அரிசியை 1 மணி நேரமும் ஊறவைத்து தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து இரவு முழுவதும் வைக்கவும். மறுநாள் காலை 1/2 லிட்டர் தண்ணீரில் அரைத்தவற்றை கரைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில்  1 லிட்டர் தண்ணீர், உப்பு, அரைத்த விழுது சேர்த்து கொதிக்க வைத்து, கரைத்த மாவு கலவையை ஊற்றி அடிபிடிக்காமல் கைவிடாமல் கிளறவும். மாவு வெந்து கலர் மாறி வந்ததும் இறக்கி விடவும். கூழ் ரெடி.

பிளாஸ்டிக் ஷீட் முழுவதும் நல்லெண்ணெய் தடவி முறுக்கு அச்சில் மாவினை போட்டு நீள நீளமாக பிழியவும். மாவு முழுவதையும் இதே போல் பிழியவும். வெயிலில் காயவைக்கவும். மறுநாள் இந்த வடவத்தை மறுபுறம் திருப்பி வைக்கவும். மொத்தம் 5 நாட்கள் வெயிலில் நன்கு காயவைக்கவும். சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து மேலே சாட் மசாலாத்தூள் தூவி சாப்பிடவும்.