×

2-ம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்: தகுதி பெற்ற அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்..!

டெல்லி: இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டார் பிரதமர் மோடி. அவர் மார்ச் 1 ஆம் தேதி பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொணடார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டார். இந்தியாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட கரோனா பரவும் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியை செலுத்திக்கொண்டார். கடந்த மார்ச் 1 ஆம் தேதி கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்ட நிலையில், இன்று இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்டுள்ளார் பிரதமர்.

Tags : Corona ,Modi , 2nd dose corona vaccinated: All eligible people should be vaccinated: PM Modi's request ..!
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...