×

மிரட்டும் கொரோனா வைரஸ்..! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.36 கோடியாக உயர்வு: 28.98 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28.98 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,898,036 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 133,668,020 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 107,791,928 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 100,686 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.36 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 13,36,74,287 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10,77,97,186 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 28 லட்சத்து 98 ஆயிரத்து 588 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 22,978,513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 100,730 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Tags : Intimidating corona virus ..! Global death toll rises to 13.36 crore: 28.98 lakh fatalities
× RELATED 18 வயது நிரம்பியவர்களுக்கு மே 1 முதல்...