பன்னீர் மின்ட் கறி

எப்படிச் செய்வது :

Advertising
Advertising

முதலில் காய்கறிகள் அனைத்தையும் பொடியாக நறுக்கவும். நறுக்கிய காய்களை குக்கரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். இதனுடன் கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளிக்கவும். இதில் அரைத்த விழுது, பன்னீர் சேர்த்து தட்டால் மூடி நன்கு கொதிக்க விடவும். இப்போது வேக வைத்த காய்கறிகளை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். குழந்தைகளுக்கு பிடித்த பன்னீர் மின்ட் ரெடி.