பூசணிக்காய் அல்வா

செய்முறை :

Advertising
Advertising

கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு, அதே கடாயில் பூசணிக்காய்  துருவல் சேர்த்து கைவிடாமல் கிளறவும். ஐந்து நிமிடத்திற்கு பிறகு சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக குழைய கிளறவும். பிறகு, அதில் நெய் சுற்றி ஊற்றி ஐந்து நிமிடங்கள் நன்றாக கிளறவும். ஏலக்காய் தூள், மஞ்சள் கலர் மற்றும் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்றாக கிளறி அல்வா பதம் வந்ததும் கிளறி இறக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு சாப்பிடவும்.