குரங்குகளுக்கும் மொழியுண்டு!

நமது முன்னோர்களான குரங்கு இனங்களில் நியாண்டர்தால்களும் ஒன்று. சமீபத்திய ஆய்வில் நியாண்டர்தால் குரங்குகளும் நம்மைப் போலவே மொழியை கேட்பதற்கும் பேசுவதற்குமான திறன்களோடு  இருந்திருக்கும் என்று கண்டறிந்துள்ளார்கள். அமெரிக்காவில் உள்ள பின்ஹாம்டான் பல்கலைக் கழகம், வடக்கு ஸ்பெயினில் உள்ள ‘அடப்யூர்க்கா என்ற தொல்லியல் பகுதியில் ஆய்வை  மேற்கொண்டது. அங்கு கிடைத்த நியாண்டர்தால் மனிதர்களின் மண்டை ஓடுகளை எடுத்து கணிப்பொறியில்  வடிவமைக்கப்பட்ட செவிப்புலன் பகுதிகளை நிர்மாணித்தார்கள். அந்த 3டி மாடல் மண்டை  ஓட்டை தற்கால மனித மண்டை ஓட்டோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது நியாண்டர்தால் குரங்குகளின் செவிப்புலன் அமைப்பும் நமது செவிப்புலன் அமைப்பும் கிட்டதட்ட ஒரே போல் இருந்திருக்கின்றன  என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். மனிதர்களைப் போலவே 5 kHz அலகு கொண்ட ஒலியை நியாண்டர்தால்களாலும் கேட்க இயன்றிருக்கிறது. இதன் மூலம் நியாண்டர்தால்களும் மனிதர்களைப்  போலவே நுண்மையான ஒலி அலகு மாறுபாடுகளோடு சொற்களை உச்சரிக்கும் திறனும் அதை கிரகிக்கும் திறனும் கொண்டவர்கள் என்பது  உறுதியாகியுள்ளது. நியாண்டர்தால்களின் மொழி என்னவாக  இருக்கும் அது நமது இன்றைய மொழி போல் நுட்பமானதா என்ற விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

Related Stories:

>