×

பத்தாவது கிரகம்னு ஒண்ணு இருக்கா இல்லையா?

பல நூற்றாண்டுகளாக சூரியக் குடும்பத்தில் ஒன்பது கிரகங்கள் என்றுதான் நாம் கருதிக் கொண்டிருந்தோம். எனவேதான் ‘நவகிரகம்’ என்கிற கான்செப்ட்டே கூட உருவானது. தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென விண்வெளி ஆய்வாளர்கள் புளூட்டோ என்கிற கிரகத்தை கண்டு பிடித்தார்கள். அதுதான் சூரியக் குடும்பத்தின் கடைக்குட்டி கோள் என்றும் நாம் கொண்டாடிக் கொண்டிருந்தோம்.சூரியனிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் பெரிய பனிக்கட்டியாக உறைந்திருக்கிறது புளூட்டோ என்றும் நம்பப்பட்டது. ஆனால், விரைவில் க்யூப்பியர் பெல்ட் பனிக் கோளங்கள் வரிசையாக கண்டுபிடிக்கப்பட ப்ளூட்டோவும் அதில் உருவான ஒரு பெரிய பனிப் பாறையோ என்று சந்தேகப்பட்டார்கள். கொஞ்ச நாளில் ப்ளூட்டோவின் உபகிரகம் ஒன்று கண்டு
பிடிக்கப்பட்டபோது, புளூட்டோ கோள்தான்
என்று புன்னகைத்தார்கள்.

ஆனால் -
அது நெப்ட்யூனின் வலசைப் பாதையை இடைவெட்டிச் சென்றபோது மீண்டும் குழம்பினார்கள். 2006ம் ஆண்டில் ப்ரேக் நகரில் நடைபெற்ற சர்வதேச வானியல் கூட்டமைப்பின் மாநாட்டில் புளூட்டோ தொடர்பான விவாதம் எழுந்தது. பனியால் ஆன கோள் என்றாலும் விவாதம் சூடாகவே நடந்தது. கடைசியாக புளூட்டோ கோள் இல்லை என்று ஒருமனதாக - ஆனால் நெஞ்சம் நிறைய துக்கத்தோடு - அறிவித்தார்கள்.கோள் என்பதற்கு மூன்று அடிப்படை வரையறைகளை முன்வைத்தார்கள். சூரியனை மையமாகக் கொண்டு சுற்ற வேண்டும். கோள வடிவத்தில் இருக்க வேண்டும். டெப்ரிஸ் ஃபீல்டு எனப்படும் கரடுமுரடான பகுதிகளை நீக்கியிருக்க வேண்டும் என்பதுதான் அந்த முக்கியமான வரையறைகள். இதன்படி ப்ளூட்டோ கோள் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
பதினைந்து ஆண்டுகள் கழிந்த நிலையில் மீண்டும் புளூட்டோ கோள்தான் என்று சில அறிவியலாளர்கள் அறிவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். புளூட்டோ சர்ச்சை மெகாசீரியல் மாதிரி இழுத்துக்கொண்டே போகிறது.

Tags : கிரகம்
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்