இதுதான் ரகசியம்!

நன்றி குங்குமம் டாக்டர்

தெரியுமா?!

கிரீன் டீ குடிப்பது உடல் எடையை குறைக்கும், சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் என்பதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதுபோன்ற நன்மைகளால் கிரீன் டீ பருகுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்கான அடிப்படை ரகசியம் Polyphenols என்ற வேதிப்பொருளில்

அடங்கியிருக்கிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செயல்படும் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வுக்குழு கிரீன் டீயில் காணப்படும் பாலிபெனால்ஸ் மூலக்கூறுகள் உடலுக்கு பலவிதங்களில் நன்மை புரிவதைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மூலக்கூறுகள் கல்லீரலால் கிரகிக்கப்பட்டு பல்வேறு வளர்சிதை மாற்றப் பணிகளில் பங்கெடுக்கிறது. ரத்தம் மற்றும் தோல் செல்களாலும் இந்த மூலக்கூறுகள் உறிஞ்சப்படுகின்றன.

குடல் பகுதியும் கிரீன் டீயிலுள்ள இந்த மூலக்கூறுகளை கிரகிப்பதாக இந்த புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கிரீன் டீயிலுள்ள இந்த மூலக்கூறு உடல் எடை  குறைப்பிற்கு முக்கியக் காரணமாக இருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலிபெனால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடன்டாக செயல்பட்டு பல்வேறு நலன்களைத் தருகிறது. ஆப்பிள், நெல்லிக்காய், திராட்சை போன்ற காய், கனிகளிலும் நிறைந்துள்ளதுதான் பாலிபெனால்!

- கௌதம்

Related Stories: