காற்றின் தரம் மிதமான பிரிவுக்கு முன்னேற்றம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 173 ஆக நேற்று பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக காற்றின் தரம் மிதமான பிரிவுக்கு முன்னேறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம் வரை காற்றுமாசு அதிகரித்து காற்றுத்தரக்குறியீடு எண் 269 ஆக பதிவானது. ஆனால், நேற்று இதில் முன்னேற்றம் ஏற்பட்டு காற்றுத்தரக்குறியீட்டு எண் 173 ஆக பதிவானது. இதன் காரணமாக காற்றின் தரமும் மேம்பாடு அடைந்து மிதமான பிரிவுக்கு சென்றது. இதேபோன்று காற்றுத்தரக்குறியீடு லோதி சாலையில்(183) ஆகவும், புசா சாலையில்(166) ஆகவும் பதிவானது.

Related Stories: