×

தர்மபுரி மாவட்டத்தில் பூத்து குலுங்கும் மாம்பூக்கள்-விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு

அரூர் :  தர்மபுரி மாவட்டத்தில், மா மரங்களில் பூக்கள் பூத்து குலுங்கிறது. இதனால் இந்தாண்டு விளைச்சல் அமோகமாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பாரப்பட்டி, பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் மா சாகுபடி செய்யபட்டுள்ளது.

கடந்தாண்டில் பருவமழை சரியான நேரத்தில் பெய்ததால், தற்போது மாவட்டம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டுள்ள மா மரங்களில் பூக்கள் பூத்துள்ளது. இதனால் காய் பிடிப்பு கடந்த ஆண்டை காட்டிலும் நல்ல விளைச்சல் இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.  

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘மாவட்டம் முழுவதும் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியை அடுத்து தர்மபுரி மாவட்டத்தில் அதிகம் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாம்பழ கூழ் தயாரிக்கும் ஆலைகள் உள்ளது. தற்போது மாங்காய் செடிகளில் பூக்கள் பூத்து குலுங்குகிறது,’ என்றனர். 


Tags : Dharmaburi district , Arur: In Dharmapuri district, mango trees are in full bloom. Thus farmers expect this year's yield to be overwhelming
× RELATED தர்மபுரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை...