சாலையில் பரவிய மண்ணால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்

காளையார்கோவில் : காளையார்கோவில் அருகில் கோடிக்கரை கோளாந்தி பகுதிகளில் பல வருடங்களுக்கு முன் போடப்பட்ட தார்ச்சாலை மிகவும் மோசமாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.காளையார்கோவில் அருகில் கோடிக்கரை, கோளாந்தி, அஞ்சாவயல் உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இப்பகுதி மக்கள் ரேசன் பொருட்கள் வாங்குவதற்கும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிக்கும் பல வருடங்களுக்கு முன் போடப்பட்ட இனைப்புச் சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். இச்சாலை கண்மாய்கரை இறக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் தற்போது பெய்த சிறு மழைக்கே கரையில் உள்ள மண் கரைந்து ரோடு முழுவதும் சகதியாகவும் தற்போது வெயில் அடிப்பதால் மண் சாலையாகவும் உள்ளது.

அப்பகுதியில் பேருந்து வசதி குறைவாக உள்ளதால் கிராம மக்கள் இருசக்கர வாகனங்களிலும் பள்ளி செல்லும் மாணவ,மாணவர்கள் சைக்கிளையும் பயன்படுத்தி வருகின்றார்கள். சாலை முழுவதும் உள்ள மண் வாரி விட்டு அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை உள்ளதால், அனைத்து தேவைகளுக்கும் நடந்தே செல்லும் நிலை உள்ளது. மேலும் மண் சாலை மற்றும் குண்டும் குழியுமாக உள்ள தார்சாலையை தரமான சாலையாக அமைத்துத்தர வேண்டும் என்றும், கண்மாய்கரை மண் சரிவை தடுக்கும் வகையில் தடுப்புச்சுவர் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Related Stories: