பெண்கள் எங்கு சென்றாலும் பாதுகாப்பற்ற சூழ்நிலை-மகளிர் தின விழாவில் முன்னாள் துணைவேந்தர் பேச்சு

காரைக்குடி : காரைக்குடியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மகளிர் வலையமைப்பு சார்பில் மகளிர் தின விழா கொண்டாப்பட்டது. மாவட்ட மகளிர் அமைப்பாளர் ஜெயலட்சுமி வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் சினேகவள்ளி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்பரசு பிரபாகர் தொடக்க உரையாற்றினார்.

அன்னை தெரசா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மணிமேகலை துவக்கி வைத்து பேசுகையில், மாணவர்களின் அடிப்படை கட்டமைப்பை சரியாக உருவாக்குபவர்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள். பெண்களுக்கான இடஒதுக்கீடு இன்னும் முழுமையாக வழங்கப்பட வில்லை. உயர் பதவிகளில் குறைந்த சதவீதத்தில் தான் பெண்கள் உள்ளனர். எந்த காலத்திலும் தமது சுயமரியாதையை விட்டுக்கொடுக்க கூடாது. கட்டுப்பாட்டுன் கூடிய சுதந்திரம் வேண்டும்.

பெண்கள் சம்பாதிக்க கூடிய இயந்திரங்களாக உள்ளனர். அதிகாரமற்ற பதவிகளில் தான் பெண்கள் உள்ளனர். உயர் பதவிகளில் வரவேண்டும். பெண் குழந்தைகளை தைரியமாக வளர்க்க வேண்டும். தன்னை தானே கட்டமைத்துக் கொள்ள பெண் குழந்தைகளை அவர்களது தாய் பழக்க வேண்டும். பெண்களுக்கு என்ன தேவை என்பது அவர்களுக்கு தான் தெரியும். ஆனால் பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் இடத்தில் ஆண்கள் உள்ளனர்.

இந்த சமூகம் மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பெண்கள் எங்கு சென்றாலும் தற்போது பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. நம்மை அறியாமலையே ஆண்கள் நம்மை ஆள்கின்றனர் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கல்விஅலுவலர் சண்முகநாதன், மாவட்ட தலைவர் அருள், மாநில செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன், மாவட்ட பொருளாளர் பொன்னுச்சாமி, அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் தமிழ்மணி நன்றி கூறினார்.

Related Stories: