×

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நெல்லையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

நெல்லை : சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நெல்லையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. இதில் மாணவர்கள், பெண்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். கலெக்டர் அலுவலகத்தில் வண்ணக் கோலங்கள் வரைந்து பெண்கள் அசத்தினர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக வரும் ஏப்.6ம் தேதி நடக்கிறது.

இதில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நெல்லையில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. பாளை காதுகேளாதோர் பள்ளியில் துவங்கிய சைக்கிள் பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான விஷ்ணு கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணிக்கு அவரே தலைமை வகித்து சைக்கிள் ஓட்டி வந்தார்.

இதில் டிஆர்ஓ பெருமாள், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், ஒருங்கிணைப்பாளர்கள் உதவி கலெக்டர் (பயிற்சி) அலர்மேல் மங்கை, துணை கலெக்டர் (பயிற்சி) மகாலட்சுமி, தேர்தல் தாசில்தார் கந்தப்பன், நெல்லை தாசில்தார் பகவதிபெருமாள், பாளை தாசில்தார் செல்வன் மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள், மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றதோடு விழிப்புணர்வு முழக்கமிட்டனர். முக்கிய சாலைகள் வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை, சைக்கிள் பேரணி நடந்தது. தொடர்ந்து 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொடர்ந்து ரெட்கார்ஸ் நாங்குநேரி அமைப்பைச் சார்ந்த தன்னார்வலர்கள் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பான தேர்தல் விழிப்புணர்வு ஓரங்க நாடகம் நடத்தினர். முதல் முறை வாக்காளர்களுக்கு அங்கு வைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடியில் வாக்களிப்பது  தொடர்பான  பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை பார்வையிட்டு, தேர்தல் குறித்த விழிப்புணர்வை எடுத்துரைத்து கல்லூரி மாணவ- மாணவிகளிடம்,  அனைவரும் வருகிற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம்  வாக்களிக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியை முன்னிட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வண்ணக் கோலங்கள் வரையப்பட்டிருந்தது. இந்த கோலங்கள் முழுவதும் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றது அனைவரையும் கவர்ந்தது. பெண்கள் மெகந்தி போட்டு கையில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், தேர்தல் பிரிவு சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Nellai , Nellai: An awareness cycle rally was held in Nellai demanding 100 per cent turnout in the Assembly elections. In which
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!