கி.பி 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால தேவதான கல்வெட்டு-முசிறி காவிரி ஆற்றங்கரையில் கண்டெடுப்பு

முசிறி : முசிறி பரிசல் துறை ரோட்டில் அமைந்துள்ள காவிரியாற்றின்அருகே அமைந்துள்ள அழகுநாச்சியம்மன் கோயில் முன்பு ஓர் நடுகல் அமைந்துள்ளது அந்த நடுகல்லில் எழுத்துப் பொறிப்புகள் உள்ளது இதுகுறித்து கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளர் பாபு கூறியதாவது.விளம்பி வருடம்.....எனத்தொடங்கும் இக்கல்வெட்டில், பிரமிக்கி நாயக்கர் வத்திரக்கூடையார்என்பவர் அழகுநாச்சியம்மனுக்குதேவதானமாக நிலம் கொடுத்துள்ளார்.

மேலும் இந்த நிலத்தை அபகரித்தாலோ அல்லது ஊறுவிளைவித்தாலோ அவர்கள் ,கங்கைககரையில் காராம் பசுவையும்,பிராமணரையும் கொன்ற பாவத்திற்கு ஆளாவார்கள் என்ற செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.பொதுவாக வரலாற்றுகால பழமைவாய்ந்த பல கல்வெட்டுகளில் கோயில்களுக்குதேவதானமாக மன்னர்கள் பலர் நிலங்கள்,கால்நடைகள்,தேவரடியார்களையும் தானமாக கொடுத்துள்ளனர், அந்த செய்தியை ஆவணமாக கல்வெட்டிலும்,செப்பேடுகளிலும் மற்றும் ஓலைச்சுவடிகளிலும் எழுதி வைத்தனர்.

மேலும் பல கல்வெட்டுகளில் அந்த தானத்தின் உபயோகம் சந்திர சூரியர் உள்ளவரை பயன்படுத்தப்பட வேண்டும் என குறியீடுகளாகவோ, எழுத்து வடிவிலோ பொறிக்கப் பட்டிருக்கும்.அந்த வகையில் அழகுநாச்சியம்மன் கோயில் முன் உள்ள கல்வெட்டு செய்தியும் அமைந்துள்ளது.இது நாயக்கர் காலத்திய கல்வெட்டாகும். என்று கல்வெட்டு ஆய்வாளர் பாபு கூறினார்.

Related Stories: