டெல்லியில் 7 ஆண்டுகளுக்கு பின் குறைந்தது காற்றுமாசு!: , 2020 - 21 பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்..!!

டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக 7 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் காற்று மாசு அளவு குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. டெல்லியில் 2020 - 2021ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை அம்மாநில துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் கொரோனா ஊரடங்கின் தாக்கங்களால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும், விரிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது. டெல்லியில் முக்கிய பிரச்சனையாக கருதப்படும் காற்றுமாசு,  கொரோனா ஊரடங்கால் 7 ஆண்டுகளுக்கு பின்னர் குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காற்று பி. எம் 10, பி. எம் 2.5 நுண்துணிக்கைகள் மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு உள்ளிட்ட மாசு துகள்களின் சராசரி விகிதம் 2014ம் ஆண்டுக்கு பின்னர் 2020ம் ஆண்டில் தான் கணிசமாக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் இதய, நுரையீரல் நோய்களுக்கு காரணமான பி.எம். 2.5 நுண்துணிக்கையின் அடர்தியின் வருடாந்திர சராசரி, கடந்த 2014ம் ஆண்டு 149 UG/M3 ஆக இருந்தது.

இது, 2020ல் 101 UG/M3 ஆக குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாகன புகையில் இருந்து வெளியிடப்படும் காற்று மாசு படுத்தியான் சல்பர் டை ஆக்ஸைடின் அளவு கடந்த ஆண்டுகளில் குறையவில்லை. மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக வாகனங்கள் இயங்காததால் முன்னெப்போதும் இல்லாத வகையில் காற்று மாசு குறைந்திருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: