×

அதிமுக ஒதுக்கும் குறைந்த தொகுதிகளை ஏற்பதா? அல்லது தனித்து போட்டியா?: விஜயகாந்த் அவசர ஆலோசனை

சென்னை: தேமுதிக மாவட்டச் செயலாளா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதிமுக தரப்பில் 13-இல் இருந்து 15 வரையே தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதால் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக ஒதுக்கும் குறைந்த தொகுதிகளை ஏற்பதா? அல்லது தனித்து போட்டியா? என ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெறலாமா எனவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பொதுச்செயலாளர் சுதீஷ் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

மேலும் அனைத்து மவாட்ட நிர்வாகிகளும் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தேர்தல் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளை அதிமுக கூட்டணி உறுதி செய்தது. அதேபோல் பாஜக கூட்டணிக்கு 20 தொகுதிகளை ஒதுக்கியது. இந்நிலையில் தேமுதிகவுக்கு நாங்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்கவில்லை என தேமுதிக நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். இது தொடர்பாக நடந்த அனைத்து பேச்சுவார்த்தையும் இழுபறியில் உள்ளதால் மாவட்டச் செயலாருடன் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.


Tags : Vizyaganth , AIADMK allotment, acceptance of constituencies, Vijayakant, advice
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்கள்...