நாகையில் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு கம்பி வேலியால் அடைப்பு: இருதரப்பினர் மோதலை தடுக்க போலீசார் குவிப்பு

நாகை: கீழையூர் அருகே 7 தாழ்த்தப்பட்டோர் குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்புக்கு செல்லும் பாதை கம்பி வேலியால் அடைக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர் குடும்பத்தினர் வெளியே வர முடியாத வகையில் சபாநாதன் என்பவர் கம்பி வேலியை கொண்டு பாதையை அடைத்துள்ளார். தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் கோவில்பத்து தெருவிற்கு தனது இடம் வழியாக குடிநீர் குழாய் கொண்டு செல்ல சபாநாதன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தாழ்த்தப்பட்டோர் பகுதிக்கு குடிநீர் குழாய் கொண்டுசெல்ல சபாநாதன் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மடப்புரம் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் மடப்புரம் ஊராட்சி கோவில்பத்து பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மடப்புரம் ஊராட்சி மன்ற தலைவியாக இருந்து வருகிறார். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் வசிக்கும் கள்ளத்திடல் பகுதிக்கு குடிநீர் கொண்டு வருவதற்கு திட்டமிட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற்று கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் வாழக்கரையிலிருந்து குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடந்து வந்தது.

இந்நிலையில் ஒருவாரமாக குடிநீர் குழாய் பாதிக்கும் பணியானது நடந்து வருகிறது. கோவில்பத்து பகுதிக்கு அருகில் குடிநீர் குழாய் பாதிக்கும் பணி நடைபெறும் போது அதேபகுதியை சேர்ந்த சபாநாதன் என்பவர் வந்து தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் இரண்டு தரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ரமேஷ் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சபாநாதன் என்பவர் தன்னுடைய பகுதியாக இருப்பதால் குழாய் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் இந்த இடம் அவருடைய பகுதி கிடையாது. நீண்ட காலமாக ஆற்று ஓரத்தில் இருப்பதால் புறம்போக்கு நிலமாக தான் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் வசித்து வருவதாக இங்கிருக்கக்கூடிய தலித் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ரமேஷ் என்பவர் புகார் அளிக்கிறார். தனது பகுதிக்கு குடிநீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குழாய் பதிக்கும் பணியை தொடர்வதற்கு பாதுகாப்புடன் அனுமதி வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளார். காவல்துறை தொடர்ந்து அலட்சிய போக்குடன் செயல்படுவதால் தலித் மக்கள் சபாநாதனிடம் உதவியை நாடுகின்றனர்.

சபாநாதன் தொடர்ந்து தன்னுடைய பகுதி வழியாக குடிநீர் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இருந்தபோதிலும் இந்த பகுதி வழியாக குடிநீர் குழாயும் கொண்டுவர கூடாது. இந்த பகுதி வழியாக நடமாடவும் கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவர்கள் சென்று வரும் பாதையை இரும்பு கம்பி மூலம் வேலி அமைத்து அடைத்துள்ளனர். தற்போது அந்த 7 குடும்பங்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஆற்று ஓரத்தில் அந்த கம்பி வெளியானது போடப்பட்டுள்ளதால் கம்பி வேலிக்கு அருகாமையில் உள்ள பக்கத்தில் தான் அவர்கள் நடந்து செல்ல முடிகிறது. இருந்தாலும் குழந்தைகள், இருசக்கர வாகனத்தில் செல்லமுடியவில்லை, தண்ணீர் எடுத்து செல்ல முடியவில்லை உள்ளிட்ட அடிப்படை வேலைகளை கூட செய்ய முடியவில்லை என அங்கிருக்கக்கூடிய கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் அது தன்னுடைய இடம் என்று அதற்குரிய ஆவணங்களை காவல்துறை மற்றும் வருவாய் துறையிடம் சபாநாதன் என்பவர் அளித்து விளக்கமளித்துள்ளார்.

Related Stories: