“மு.க.ஸ்டாலினால் நாட்டுக்கு நன்மை’’ ...167 தொகுதியில் திமுக வெற்றி பெறும் : போரூர் சாமியார் அருள்வாக்கு

பூந்தமல்லி :சென்னை போரூர் அருகே ஐய்யப்பன்தாங்கலில் ஓம்காளி பகவதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஓம்காளி அன்பரசு சுவாமிகள், கடந்த 20 ஆண்டுகளாக குறி சொல்லி வருகிறார். முக்கிய நிகழ்வுகள், அரசியல் நிலவரம் குறித்தும் அவ்வப்போதுஅருள்வாக்கு கூறி பரபரப்பை ஏற்படுத்துவார்.கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக வெற்றிப் பெறும். மத்தியில் பாஜ வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார். 2020ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிப்பெறும் என்று கணித்து கூறினார்.

இந்தநிலையில், வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்து முதல்வர் ஆவார் என்று ஒரு பக்தர் கேள்வி கேட்டார். அதற்கு சாமியார், ஒரு இளநீரை நூலில் கட்டி, அது சுற்றி சுற்றி வருவதை வைத்து அருள்வாக்கு கூறினார்.இதன்படி தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக 167 தொகுதிகளில் வெற்றிப்பெற்று  மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவார் என்று அன்பரசு சுவாமிகள் கூறியிருக்கிறார்.

இதுபற்றி சாமியார் கூறுகையில்,‘’நான் எந்த கட்சியையும் சாராதவன். மு.க.ஸ்டாலின் ஆட்சியால் நாட்டுக்கு நன்மை நடக்கும். காளியம்மன் அருள் மூலமாக வாக்கு கூறுகிறேன். இதுவரை அரசியல் தொடர்பான அனைத்து அருள்வாக்குகளும் உண்மையாக நடந்திருக்கின்றன’ என்றார்.

Related Stories:

>