15 மாதங்களுக்குப் பின் வெளிநாடு செல்கிறார் பிரதமர் மோடி: வங்கதேச 50-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்பு

டெல்லி: வங்கதேச நாட்டின் சுதந்திர பொன்விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி வரும் 26-ம் தேதி வங்கதேசம் செல்கிறார். 15 மாதங்களுக்குப் பிறகு பிரதமர் செல்லும் வெளிநாட்டு பயணம் இது ஆகும். இதற்கு முன்னர், 2014ம் ஆண்டு இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்றார். அந்த ஆண்டின் ஜுன் 15 முதல் 2019ம் ஆண்டு வரையில் பிரதமர் மோடி 96 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதில், 2014ம் ஆண்டு 9 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மோடி 2015 ஆம் ஆண்டு 23 நாடுகளுக்கும், 2016ம் ஆண்டு 17 நாடுகளுக்கும் அடுத்த ஆண்டுகளில் 14 நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார்.

கடந்த, 2017-ம் ஆண்டு 14 வெளிநாட்டு பயணங்களும், 2018-ம் ஆண்டு 23 வெளிநாட்டு பயணங்களும், 2019-ம் ஆண்டு 15 வெளிநாட்டு பயணங்களும் மேற்கொண்டுள்ளார். 1 முறை 35 நாடுகளுக்கும், 2 முறை 15 நாடுகளுக்கும், 3 முறை 2 நாடுகளுக்கும், 4 முறை 4 நாடுகளுக்கும், 5 முறை 3 நாடுகளுக்கும், 6 முறை 1 நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 2015ம் ஆண்டில் அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கும் மட்டும் 500 கோடிக்கு மேல் செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. 2020-ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கியதால் அனைத்து நாடுகளுக்குமான விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

அதன் காரணமாக பிரதமர் மோடி எந்த நாட்டிற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. இதன் மூலம் 2020-ஆம் ஆண்டு பிரதமருக்கு வெளிநாடு பயணம் இல்லாத ஆண்டாக மாறியது. இந்நிலையில் வங்க தேசத்தின் 50வது சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி 15-ம் தேதி வங்கதேசம் செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 1971ல் கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து வங்கதேசமாக உருவானது. இதன் 50வது ஆண்டு விழா வங்கதேசத்தில் கொண்டாடப் பட உள்ளது. வங்கதேசம் உருவானதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. பாகிஸ்தானுடன் போரிட்டு தனிநாடு உருவாக இந்திய ராணுவம் முக்கிய பங்கு வகித்தது.

இதன் 50வது ஆண்டு விழா வங்கதேசத்தில் கொண்டாடப் படுகிறது. இதற்காக தலைநகர் டாக்காவில் பிரமாண்ட விழா நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி மார்ச் 26ல் வங்க தேசம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 15 மாதங்களுக்குப் பின் பிரதமர் மோடி வெளிநாடு செல்வது இதுவே முதன் முறை ஆகும். மேலும் 2021-ம் ஆண்டின் முதல் பயணம் இதுவாகும். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா - மோடி பேச்சுக்குப் பின் இருவரும் தாஹா - மேற்கு வங்கம் நியூ ஜல்பைகுரி இடையிலான பயணிகள் ரெயில் சேவையை துவக்கி வைக்க உள்ளனர்.

Related Stories: