அஜித்குமாருக்கு ஓபிஎஸ் வாழ்த்து

சென்னை: மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறி  இருப்பதாவது:தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்து வரும் அஜித்குமார், சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம்  வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: