×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா கிடையாது: தெற்கு வீதியில் மட்டும் நடைபெறும்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற நடராஜர் கோயில் மற்றும் தெற்கு வீதியில் உள்ள விஎஸ் டிரஸ்ட் வளாகத்தில் ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வந்தது. இந்நிலையில் சிதம்பரம் நடராஜர்  கோயில் வழக்கறிஞர்கள் மற்றும் பொது தீட்சிதர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நடராஜர் கோயிலின் உள்ளே நாட்டியாஞ்சலி விழா நடைபெறாது என கோயில் பொது தீட்சிதர்கள் அறிவித்துவிட்டனர். இந்த நிலையில் சிதம்பரம்  தெற்கு வீதியில் உள்ள விஎஸ் டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் 40வது நாட்டியாஞ்சலி விழா வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி  அளித்துள்ளதாக நாட்டியாஞ்சலி குழு தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு சிதம்பரம் தெற்கு வீதியில் மட்டும் நாட்டியாஞ்சலி விழா நடைபெற உள்ளது.

Tags : Chidambaram Natarajar Temple ,Natyanjali ,South Street , Chidambaram Natarajar Temple does not have a Natyanjali festival: it is held only on South Street
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...