×

கிருஷ்ணகிரி அருகே குடுமியுடன் சுற்றித்திரிந்த 15 வயது சிறுவனுக்கு கிராப் வெட்டி அனுப்பிய இன்ஸ்பெக்டர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி-மகாராஜகடை சாலையில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 15 வயது சிறுவன் காதில் கடுக்கன், கோழிக்கொண்டை கிராப் சகிதமாக டூவீலரில் வேகமாக வந்தான்.  அவனை வழிமறித்து விசாரித்தபோது இதெல்லாம் ”யூத் ஸ்டைல்” எனவும் மாடர்னாக இருப்பது தவறா? எனவும் எதிர் கேள்வி எழுப்பியுள்ளான்.  இதையடுத்து,  இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார், அந்த சிறுவனை அருகிலுள்ள சலூன் கடைக்கு  அழைத்துச் சென்று அவனுக்கு முடி திருத்தம் செய்து, படிக்கும் மாணவர்கள் கல்வி கற்பதையும், ஒழுக்கத்தையும் மட்டுமே கொண்டிருக்க வேண்டும் எனஅறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளார். அங்கு நடந்த சம்பவம் தற்போது வீடியோவாக  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் ஒரு சிலர் இன்ஸ்பெக்டரை பாராட்டியும், மற்றொருபுறம் சிறுவனை வீடியோ எடுத்து வெளியிடுவது சட்டப்படி குற்றம் எனவும் குரல் எழுப்பி வருகின்றனர்.



Tags : Krishnagiri , Inspector who cut and sent a 15-year-old boy who was wandering around with his family near Krishnagiri
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்