கம்பம்...கலக்கம்!

தேனி மாவட்டத்தின் கம்பம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் களம் காண்கிறார் என்று ‘டாக்’ ஓடியது. தற்சமயம் ஜெயபிரதீப் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் வராததால், முஸ்லிம்கள்  ஓட்டை குறிவைத்து அதிமுக மாவட்ட செயலாளர் சையதுகானை நிறுத்த போவதாக பேச்சு அடிபட்டது. இதற்கிடையில் ஓபிஎஸ்சின் தீவிர விசுவாசியும், கம்பம் முன்னாள் சேர்மனுமாகிய டி.டி.சிவக்குமாரை ஓபிஎஸ் தரப்பு இறக்க  போவதாகவும் பேச்சு அடிபட்டது.ஆனால், ஓபிஎஸ்சை தவிர்த்து இபிஎஸ்சை தொடர்பு கொண்டு டி.டி.சிவக்குமார் தனக்கு கம்பத்தில் சீட் ஒதுக்க கேட்டதால், கடுப்பான ஓபிஎஸ், எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான முன்னாள் எம்எல்ஏ  சுப்புராயரை தொடர்பு கொண்டு, கம்பம் சட்டமன்றத்திற்க்கு விருப்ப மனு அளிக்க சொல்லியிருக்கிறார். இதனால் டி.டி.சிவக்குமார் ஆதரவாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இதற்கிடையில் கூடலூர் முன்னாள் சேர்மன் அருண்குமார் ஆதரவாளர்கள் அருண்குமாருக்கு தான் கம்பம் தொகுதி என அடித்துச் சொல்கின்றனர். கம்பம் சிட்டிங் எம்எல்ஏ ஜக்கையன் தற்சமயம் தீவிர இபிஎஸ் ஆதரவாளராகியுள்ள நிலையில்  தனக்கு மீண்டும் கம்பம் தொகுதி ஒதுக்க கேட்டுள்ளாராம். இதற்கெல்லாம் மேலாக அதிமுக கூட்டணி சார்பில் பாஜவுக்கு ஒதுக்க போவதாக பேச்சு அடிபடுவதால் ரத்தத்தின் ரத்தங்கள் கவுண்டமணி பாணியில் தேர்தல் வந்துட்டாலே ஒரே  க(கு)ஷ்டமப்பா என புலம்பி வருகின்றனர்.

Related Stories: