சி.எம். மாவட்டத்தில இலை கட்சியின் பிரதான கூட்டணியான மாம்பழம், இங்க இருக்கிற 50 சதவீத தொகுதிகளுக்கு காய் நகர்த்துதாம். இதில் மேட்டூரு, ஓமலூரு, வீரபாண்டி, இடைப்பாடி எல்லாம் நம்ம கம்யூனிட்டி அதிகம். அதனால எங்களுக்குத் தான் ஒதுக்கணும் என்று உரக்க குரல் கொடுக்கிறதாம் மாம்பழம். இது ஒரு புறமிருக்க மணியான மாம்பழத் தலைவரோ, இந்த முறை தனது மகனை களமிறக்க வேணும் என்று கங்கணம் கட்டிக்கிட்டு காய் நகர்த்துறாராம். ஆரம்பத்தில் மாம்பழத் தலைவரின் சொந்த ஊர் மேட்டூர் என்பதால், அங்கு அவர் போட்டியிடுவார் என்று கூறப்பட்டதாம். ஆனால் இப்போது தனது மகனை களமிறக்க அவர், ஆர்வம் காட்டுறாராம்.