சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் தயாரித்த கைவினைப் பொருட்களை வாங்கிய பிரதமர்

புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் தயாரித்த பல்வேறு பொருட்களை பிரதமர் மோடி வாங்கியுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிரதமர் மோடி பெண்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், ‘‘பெண் சக்திக்கு வணக்கம் செலுத்துகிறேன். நமது நாட்டின் பெண்களின் பல்வேறு சாதனைகளால் இந்தியா பெருமை கொள்கிறது. பரந்த அளவிலான துறைகளில் பெண்கள் மேலும் அதிகாரம் பெறுவதற்கு உழைக்கும் வாய்ப்பை பெறுவது நமது அரசிற்கு கிடைத்த கவுரவமாகும்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் தோடா பழங்குடியினர் தங்களது கைகளால் பூ வேலைப்பாடு போடப்பட்ட சால்வை, காதி  காட்டன் மதுபானி வர்ணம் பூசப்பட்ட கழுத்தில் அணியும் துப்பட்டா உள்ளிட்ட பெண்கள் தயாரித்த பல்வேறு கைவினைப் பொருட்களை பிரதமர் மோடி வாங்கியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ”பெண்கள், அற்புதமான கருணையோடு வரலாற்றையும், எதிர்காலத்தையும் உருவாக்கும் திறன் பெற்றவர்கள். உங்களை தடுப்பதற்கு யாரையும் அனுமதிக்காதீர்கள்” என டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்காகாந்தி, ‘‘பெண்களின் குரலுக்கு மேலும், மேலும் இடம்கொடுப்பது பெண்கள் அதிகாரமளித்தலுக்கான அடித்தளமாகும்” என தெரிவித்துள்ளார்.

Related Stories: