மகளிர் தினத்தையொட்டி பெண்கள் தலைமையில் விவசாயிகள் போராட்டம்

புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு நேற்று பெண்கள் தலைமையேற்றனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, பஞ்சாப், அரியானா, உபி. மாநில விவசாயிகள் டெல்லியின் திக்ரி, சிங்கு, காஜிபூர் எல்லைகளை முற்றுகையிட்டு, 100 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு நேற்று பெண்கள் தலைமை தாங்கி வழி நடத்தினர். பெண் விவசாயிகள் உறுப்பினர்களாக இருக்கும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பின் தலைமையில் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, விவசாயத்தில் பெண்களில் பங்கு, அவர்கள் எதிர்கொண்ட துன்பங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். இதில், ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பேசினர். அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Related Stories: