இந்திய அளவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் விஐடி

சென்னை: இந்திய அளவில் சிறந்த 12 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் விஐடி பல்கலைக்கழகம் (பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்) இடம்பெற்றுள்ளது. மேலும், QS அமைப்பின் உலகின் சிறந்த 450 பல்கலைக்கழகங்களுக்குள் விஐடி பல்கலைக்கழகமும் இடம்பெற்றுள்ளது. விஐடி பல்கலைக்கழகத்தின் 7 பாடப்பிரிவுகள் QS அமைப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதில் 4 பாடப்பிரிவுகள் Computer Science and Information Systems. Electrical and Electronics Engineering, Mechanical Engineering  மற்றும் Chemistry  பாடப்பிரிவுகள் QS அமைப்பு பட்டியலில் கடந்த ஆண்டை காட்டிலும் 50 இடங்களுக்கு மேல் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் விஐடியின் Computer Science and Information Systems,  Electrical and Electronics Engineering பாடப்பிரிவுகளின் தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது. Electrical and Electronics Engineering  பாடப்பிரிவு உலக அளவில் முதல் 300 இடங்களுக்குள்ளும், Computer Science and Information Systems,  Mechanical Engineering  பாடப்பிரிவுகள் உலக அளவில் முதல் 400 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது. இதேபோல் விஐடி பல்கலைக்கழகத்தின் Mathematics  மற்றும் Biological Science பாடப்பிரிவுகள் முதல்முதலாக QS பாடப்பிரிவின் தரவரிசை பட்டியலில் 500 முதல் 600 இடங்களுக்குள் உலகளவில் இடம்பெற்றுள்ளது.

Related Stories:

>