2021 சட்டமன்ற தேர்தல்: தமிழகத்தில் திமுக ஆட்சி; அசாம், புதுச்சேரி- பாஜக கூட்டணி, கேரளா- கம்யூனிஸ்ட்...ஆங்கில தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் தகவல்.!!!

சென்னை: 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என ஆங்கில தொலைக்காட்சி நடத்தி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 26-ம் தேதி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த இந்திய  தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். அசாம் மாநிலத்தில் 3  கட்டமாக தேர்தல் நடைபெறும், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல்  நடைபெறும் என்று அறிவித்தார். 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே-2-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்.

இதனால், தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் பட்டியல் தயாரிப்பு, பிரச்சார திட்டம் உள்ளிட்ட  ஏற்பாடுகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, 5 மாநிலங்களின் தேர்தலுக்கு முந்தைய  கருத்துக்கணிப்பை ஆங்கில தொலைக்காட்சியான டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ளது. 5 மாநிலங்களில் யார் ஆட்சிக்கு வருவார்? எந்த கூட்டணி எத்தனை தொகுதிகளை பிடிக்கும்? மாநில முதல்வராக யாருக்கு அதிக தகுதி உள்ளிட்டவை குறித்து  ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.

தமிழகம்:

அதில், குறிப்பாக தமிழகத்தில் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணி 158 தொகுதிகளிலும், அதிமுக-பாஜக கூட்டணி 65  தொகுதிகளையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,மக்கள் நீதி மய்யம்- 5, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 3, இதர கட்சிகள் 3 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலத்திற்கு தகுதியான முதல்வர் யார்?

மு.க.ஸ்டாலின்:  38.4% ( திமுக)

எடப்பாடி பழனிசாமி: 31% (அதிமுக)

வி.கே.சசிகலா: 3.9% (அமமுக)

கமல்ஹாசன்: 7.4%( மநீம)

ரஜினிகாந்த்: 4.3%

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணி 18 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  காங்கிரஸ்-திமுக கூட்டணி 12 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்திற்கு தகுதியான முதல்வர் யார்?

ரங்கசாமி- 42.5% (என்.ஆர்.காங்கிரஸ்)

நாராயணசாமி- 35.8% (காங்கிரஸ்)

மற்றவர்கள்- 21.7%

கேரளா:

கேரள மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்படுகிறது. இடது ஜனநாயக முன்னணி 82 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயக முன்னணி 56  தொகுதிகளையும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாஜக-1, இதர கட்சிகள் 1 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்திற்கு தகுதியான முதல்வர் யார்?

பினராய் விஜயன் 38% (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்)

உம்மன் சாண்டி: 28.3% (காங்கிரஸ்)

முல்லப்பள்ளி ராமச்சந்திரன்: 2.5%

கே.கே.சைலாஜா : 5.9%

ரமேஷ் சென்னிதலா: 4.2%

ஷி சஷி தரூர்: 5.8%

எறும்பு ஏ.கே. ஆண்டனி: 2.2%

கே ஜோஸ் கே மணி: 0.8%

மற்றவர்கள்: 12.3%

அசாம்:

அசாம் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி 67 தொகுதிகளிலும் (42.9% வாக்குகள்), ஐக்கிய முற்போக்கு  கூட்டணி 57 தொகுதிகளிலும் (40.7% வாக்குகள்) , இதர கட்சிகள் 2 தொகுதிகளையும் (16.4% வாக்குகள்) கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: