வாகனங்களில் ஒட்டிவைக்கப்படும் புதுவகை வெடிகுண்டுகள் மூலம் பயங்கரவாத அமைப்புகள் சதித்திட்டம்!: ஜம்மு காஷ்மீர் போலீசார் எச்சரிக்கை

ஜம்மு: வாகனங்களில் ஒட்டிவைக்கப்படும் புதுவகை வெடிகுண்டுகள் மூலம் மிகப்பெரிய சதித்திட்டதை தீவிரவாதிகள் தீட்டியுள்ளதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் எச்சரித்துள்ளனர். இம்ப்ரொவைஸ் எஸ்பொளோசிவ் டிவைஸ் எனப்படும் ஐ.இ.டி. வெடிகுண்டுகளை ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இவ்வகை வெடிகுண்டுகள் காந்த சக்தியின் உதவியோடு வாகனங்களில் ஒட்டிவைக்கப்படும். பின்னர் ரிமோட் கண்ட்ரோலர் மூலமாகவோ அல்லது டைமர் கருவி மூலமாகவோ வெடிக்க செய்யப்படும்.

கடந்த மாதம் 14ம் தேதி சர்வதேச எல்லைக்கோடு அருகே பாகிஸ்தானில் இருந்து டிரோன் மூலம் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருமளவு ஆயுதங்களை இந்திய ராணுவம் கைப்பற்றியது. இந்த ஆயுதங்களில் காந்தம் பொருத்தப்பட்ட வெடிகுண்டுகள் இருந்ததாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த வெடிகுண்டுகளை எவ்வாறு வெடிக்க வைப்பது என்று தீவிரவாதிகள் செயல் விளக்கம் அளிக்கும் வீடியோவும், தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. எனவே வாகனம் வைத்திருக்கும் காஷ்மீரிகள் கவனமாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். லக்ஸரி தொய்பா உடன் தொடர்புள்ள பி.ஏ.எப்.எப். என்ற அமைப்பிற்கு இதில் தொடர்பிருப்பதாகவும் காஷ்மீர் போலீசார் கூறியுள்ளனர்.

Related Stories: