சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம்.: முகக்கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க சுகாதார செயலாளர் அறியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ. 200 அபராத தொகையாக வசூல் செய்தார்.

மராட்டியம், கேரள மாநிலங்களை போன்று தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரிக்க கூடாது என்பதற்காக எச்சரிக்கை மணி ஒளித்திருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்கள் 72 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு இருக்க வேண்டும் என்றும் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னையில் கோவிட் கண்காணிப்பு மையங்கள் 4,000 படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் சுகாதார செயலாளர் கூறினார்.

Related Stories: