×

கொரோனா பரவல் எதிரொலி: டெஸ்ட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடைபெறும் இடம் மாற்றம்; சவுரவ் கங்குலி தகவல்

டெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்  புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியாவும், நியூசிலாந்தும் மோதவுள்ளன. இந்த இறுதி போட்டி கிரிக்கெட்டின் தாய்மண்ணான இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் 18 – 22 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்திற்கு பதிலாக இறுதி போட்டியை வேறொரு மைதானத்தில் போட்டியை நடத்த ஐசிசி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  கொரோனா தொற்றின் பரவலினால் வீரர்களை பயோ பபூளில் வைப்பது சற்று சவாலான காரியம் என்பதால் இந்த திட்டத்தை ஐசிசி முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடனும் ஐசிசி பேசி வருகிறது.

தற்போது கொரோனா அச்சம் காரணமாக அது நியூஸிலாந்திலுள்ள சௌதாம்டனில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தகவல் தெரிவித்துள்ளார். சௌதாம்டன் மைதானத்தில் ஜூன் 18ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த மைதானத்தில் பயோ பபுளில் வீரர்களை வைத்து போட்டியை நடத்துவது எளிது என்பதால் இந்த முடிவை ஐசிசி எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Tags : Corona ,Test World Cup ,Saurav Ganguly , Corona localization echo: relocation of Test World Cup final; Saurav Ganguly Info
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...