சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லிக்கு 40,000 பெண்கள் படையெடுப்பு : 103வது நாள் போராட்டத்தில் பங்கேற்றனர்!!

டெல்லி :  டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இன்று பெண்களே தலைமையேற்று நடத்துகின்றனர். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 103வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றைய போராட்டங்களுக்கு பெண்கள் முன்னின்று தலைமை தங்குவார்கள் என்று நேற்று விவசாயிகள் சங்க தலைவர்கள் கூறி இருந்தனர்.

அதன்படி பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 40,000 பெண்கள் டெல்லி எல்லைக்குள் வந்தனர். திக்ரி, சிங்கு, காஜிப்பூர் ஆகிய எல்லை பகுதிகளில் தர்ணாவில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மத்தியில் பெண்கள் பேசினர். இன்று சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக விவசாயிகள் சங்க தலைவர் கூறியுள்ளனர். இன்றைய போராட்டத்தை முடித்துக் கொண்டு இன்று மாலையே சொந்த ஊர்களுக்கு திரும்பப் உள்ளனர்.

Related Stories: