கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள 14 ஊராட்சிகளில் பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

செங்கல்பட்டு: கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள 14 ஊராட்சிகளில் பத்திரப்பதிவு மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. கல்பாக்கம் அணு மின் நிலையத்தைச் சுற்றியுள்ள 14 கிராமங்களில் நிலங்களை யாரும் விற்கவோ, வாங்கவோ கூடாது என்றும், அப்பகுதியில் உள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் கடந்த மாதம் 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணுமின்நிலையம் அமைந்துள்ளது. அந்த அணுமின்நிலையத்தைச் சுற்றிலும் மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், கொக்கிலமேடு, மெய்யூர், எடையூர், கல்பாக்கம், மணமை, குன்னத்தூர், நெய்குப்பி, கடும்பாடி, புதுப்பட்டினம், ஆமைப்பாக்கம், நெல்லுர், விட்டிலாபுரம் ஆகிய 14 கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் பல்லாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன; பல்லாயிரக்கணக்கான வீட்டு மனைகளும் உள்ளன. இந்த மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரம் சார்ந்த நிகழ்வுகளும் சரியாக சென்று கொண்டிருந்த சூழலில் தான், இந்த 14 கிராமங்களிலும் உள்ள எந்த வகை நிலங்களையும் பத்திரப் பதிவு செய்வதற்கு மத்திய அரசு தடையாணை பிறப்பித்துள்ளது.

இதற்க்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது

கல்பாக்கத்தை சுற்றி 14 கிராமங்களில் பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையே அரசு நீக்கியுள்ளது. மேலும் அரசிதழில் குறிப்பிட்டுள்ள சர்வே எண் இடங்களை பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: