பன்ட், சுந்தர் ரன் குவிக்கும்போது இங்கி. வீரர்களால் முடியாதா?: சோயிப் அக்தர் கேள்வி

அகமதாபாத்:  இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 3-1 என்ற புள்ளிக்கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் இங்கிலாந்து அணியை பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில் பாகிஸ்தான் முன்னாள்  வீரர் சோயிப் அக்தர், இங்கிலாந்து வீரர்களுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.அவர் கூறுகையில், இங்கிலாந்துக்கு இது மிகவும் மோசமான தோல்வியாகும். இதன் பிறகு அவர்கள் எப்படி மீண்டும் சிறப்பாக ஆட போகிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் துணை கண்டங்களில் உள்ள ஸ்பின் களங்களில் எப்படி  ஆடவேண்டும் என்ற கலையை கற்றுக்கொள்ளவேண்டும்.

 இந்த தொடரில் பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது என பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்தியாவும் இதே பிட்ச்ல் தானே ஆடியது. அவர்கள் மட்டும் 365 ரன்கள் எடுக்கவில்லையா?, ரிஷப்  பன்ட், வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்களால் ரன் குவிக்க முடியுமானால், இங்கிலாந்து வீரர்களால் ஏன் முடியாது என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் கூறுகையில், ஸ்பின் பிட்ச்களில் ஆடியதால் மட்டும் அக்‌ஷர் பட்டேல் சிறப்பாக செயல்படவில்லை. திறமையான வீரரான அவர் எந்த சூழலிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர் இதே  போன்று ஆடினால், அதிவேகமாக 100 டெஸ்ட் விக்கெட் எடுத்தவர் என்ற பெருமையை பெறலாம் என்றார்.

Related Stories:

>