×

இந்தியாவின் வினேஷ் போகத் முதலிடம்

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் உலக மல்யுத்த வீராங்கனைக்கான ரேங்கிங்கில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ்போகத் 53 கிலோ எடைப் பிரிவில் உலக அளவில் 14 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

 உலக ரேங்கிங்கில் மூன்றாம் இடத்தில் இருந்த அவர் கனடாவின் டயானா மேரியை 4 - 0 என்ற  கணக்கில் வீழ்த்தி முதலிடம் பிடித்துள்ளார். இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற மேட்டியோ பெல்லிக்கான் ரேங்கிங் சீரிசில் டயானாவை வினேஷ் வீழ்த்தியதன் மூலம் தங்கம் வென்றார். கடந்த வாரம் ஒரு தங்க பதக்கத்தை அவர்  வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.Tags : Vinesh ,India , Vinesh to go first in India
× RELATED இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் காலமானார்