×

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்துள்ளது; இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்: திருச்சி சிவா பேட்டி

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என திருச்சி சிவா தெரிவித்துள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு காலை தொ டங்கியதும் புதிய உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். பின்னர் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து பேசிய மாநிலங்களவைத் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் குறித்து உடனடியாக விவாதம் நடத்த அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி தரவில்லை. இதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியதால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.  இந்நிலையில் டெல்லியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மத்திய அரசுக்கு திருச்சி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வுக்கு பிரதமர் மோடி பதில் தர வேண்டும் எனக்கோரி குரல் எழுப்புவோம்; அவை ஒத்திவைக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. கேஸ் விலையையும் மத்திய அரசு பன்மடங்கு உயர்த்தியுள்ளது. இது மக்களுக்கு இரட்டிப்பு சுமையை அளிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்துக்கு காரணம் மத்திய அரசு, இதை மறுக்க முடியாது. மத்திய அரசு கருணையே இல்லாமல் கார்ப்ரைட்டை காப்பாற்ற செயல்படுவதாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். கூட்டாட்சி தத்துவம், மாநில அரசுகள், உழைக்கும் மக்களுக்கு எதிராக மத்திய அரசுகள் சட்டங்கள் இயற்றுகிறது.

மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்ற நெறிமுறையின்படி போராடுவோம். எனவும் கூறினார்.


Tags : Trichy Siva , Rising petrol and diesel prices have pushed up prices of essential commodities; Thus people are severely affected: Trichy Siva interview
× RELATED 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.7.5 லட்சம் கோடி...