ஸ்டாலினின் தொலைநோக்கு உறுதிமொழி - காங்கிரஸ் வரவேற்பு

சென்னை: திருச்சி சிறப்பு பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 7 உறுதிமொழிகளுக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைக்கும் நோக்கத்தில் தொலைநோக்கு பார்வையோடு உறுதிமொழி அறிவித்துள்ளார். தமிழகத்தின் 7 கோடி மக்களின் இதயங்களை வெல்வதற்கு 7 தொலைநோக்கு திட்டங்களை ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஸ்டாலின் அளித்துள்ள உறுதிமொழிகள் அடிப்படையில் தேர்தலை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எதிர்கொள்ளும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அரசியல் பாதை தெளிவாக அமைக்கப்பட்டுவிட்டதாக கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Stories: