கல்வி, வேலைவாய்ப்பில் மேலோங்குதல் மட்டுமல்லாது சமூக பிரச்சனைகளுக்காக போராட்டக் களத்தில் குதிக்கும் இன்றைய சிங்கப்பெண்கள்!!

சென்னை: எரிபொருள் விலை உயர்வு, வேளாண் சட்டங்களை பெறுதல் என போராட்டங்கள் இல்லாமல் நாளை கடந்து செல்ல முடியாது. ஆனால் இந்த போராட்டங்களில் எல்லாம் எப்போதும் இல்லாத வகையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. 1921-கள்ளுக்கடைகளை அலையலையாக பெண்கள் மறித்து நின்றதும், அந்நிய துணிகளை தெருவில் தீயிட்டு கொளுத்தியதும் நாடு அதுவரை போராட்ட களம். கள்ளுக்கடை மறியலை நிறுத்துவது ஈரோடு பெண்கள் கையில் தான் இருக்கிறது என்று நாகம்மை, கண்ணம்மாள் பற்றி காந்தியடிகள் கூறும் அளவுக்கு தீவிரமாக நடந்த போராட்டம் அது.

கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடத்திய ஈரோடு பெண்கள், சமூக போராட்டம் நடத்திய ராமாமிர்தம் அம்மையார் என அன்கொன்றும்  இங்கொன்றுமான பெண்கள் போராளிகளை மட்டும் தான் பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் இன்றோ அரசியல் சமூக உரிமைக்காகவும், சூழல் தாக்கமும், வாழ்வுரிமை வேண்டியும் பெண்கள் போராட்ட களத்துக்கு வருவது அதிகரித்து விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு, டாஸ்மாக் போராட்டங்கள், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு, நீட், சிஏஏ எதிர்ப்பு என போராட்டங்களால் நாடே நலிந்து கொண்டிருக்கிறது. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெண்கள் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றன.

உரிமைகளை மறுக்கும் ஆளும் வர்க்கத்துக்கு எதிராகவும், சமூக மாற்றத்திற்காகவும், வளர்மதி, சபரிமாலா, கவுசல்யா, நந்தினி என பல பெண் போராளிகள் விதிக்கு வந்திருக்கின்றனர். சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் போலீசை துணிந்து எதிர்த்த மாணவி ஆயிஷாவை நாடே கொண்டாடியது. ஜனநாயக உரிமைகள் மறுபிக்கப்படும் போது போராட்டம் ஒன்றே தீர்வு என்று சொல்கின்றனர் போராடும் பெண்கள். வீட்டுக்குள் அடைபட்டு கிடந்த பெண்களை உயர்க்கல்வி, வேலைவாய்ப்பு, தொழிநுட்ப வளர்ச்சி போன்றவை அரசியல் படுத்த தொடங்கியிருக்கினறன.

சரி எது, தவறு எது என்று ஆராய்ந்து ஏன் போராடுகிறோம், எதற்காக போராடுகிறோம் என்ற புரிதலோடு போராட்ட காளத்திற்கு பெண்கள் வருகின்றன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 17 வயது சட்டக்கல்லுரி மாணவி வெனிஸ்டா சுட்டுக்கொலை, விவசாயிகளுக்கு ஆதரவான ஆவன தொகுப்பை டிவிட்டரில் பகிர்ந்ததற்காக மாணவி திஷா ரவி கைது என அடக்கு முறைகள் தொடர்ந்தாலும் போராட்டங்களில் பெண்களின் பங்கேற்பு கொஞ்சமும் குறையவில்லை. கடந்த நூற்றாண்டு வரை ராஜாராம் மோகன்ராய், ஜோதிராவ் புலே, பெரியார்,

என பெண்ணுரிமைக்காக ஆண்கள் குரல் கொடுத்த நிலை மாறி, இன்றைய பெண்கள் தங்கள் பிரச்சனைகளை தாண்டி சமூகத்திற்காகவும், குரல் கொடுக்கின்றனர். இந்த மாற்றம் சமத்துவ சமூகத்தை நோக்கி ஒட்டுமொத்த பெண்களையும் நகர்த்தும் என்றே சொல்லலாம்.

Related Stories: