திமுக கூட்டணியில் சிபிஎம் -க்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு... அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்துவதே இலக்கு என பாலகிருஷ்ணன் பேட்டி

சென்னை : சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் இம்மாதம் 12 ம் தேதி தொடங்க இருக்கின்றது. இதனால், அரசியல் களம் பரபரப்பாகக் காணப்படுகின்றது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, ,மதிமுக கட்சிக்கு 6 தொகுதிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீட்டு செய்யப்பட்டது. அதேபோல, இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கூட்டணி ஒப்பந்தத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் கையெழுத்திட்டனர். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே இன்று தொகுதி பங்கீடு கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் இன்று காலை 10.30 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தானது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணனும் கையெழுத்திட்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்துவதே பிரதானம். மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் திமுகவிடம் கொடுக்க இருக்கிறோம், என்றார்.

Related Stories: