கச்சா எண்ணெய் விலை உயர்வின் எதிரொலி...: இந்தியப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடக்கம்

மும்பை: உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2 % உயர்ந்ததன் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயர்ந்து 50,732 புள்ளிகளில் வர்த்தகம் ஆகியுள்ளது. மேலும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 80 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 15,020ல் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

உலகச் சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 20 % உயர்ந்து உள்ள நிலையில், 70 டாலர் 77 சென்ட்களாக உள்ளது. இதன் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தைகளில் எண்ணெய் நிறுவனங்களின் பங்கு விலை 6 % வரை அதிகரித்துள்ளது. காலை 10 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் உயர்ந்து வரும் நிலையில் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளனர்.

Related Stories:

>