வாக்கு சேகரிக்க பாஜக தலைவர்கள் தமிழகத்திற்கு படையெடுப்பு... அமித்ஷாவைத் தொடர்ந்து பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை!!

தஞ்சாவூர்:தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி விரைவில் தஞ்சை வர உள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது.  இதையொட்டி தேசிய கட்சிகளான பாஜ, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக. அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 10ம் தேதி (புதன்கிழமை) தஞ்சை வருகிறார் என்றும், தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நட்டா வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜ மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வரும் 10ம் தேதி தஞ்சையில் நடைபெற இருந்த அகில இந்திய பாஜ தலைவர் ஜே.பி.நட்டாவின் நிகழ்ச்சிகள், தேர்தல்  நிகழ்ச்சிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மற்றொரு தேதியில் பிரதமர் நரேந்தி மோடி தஞ்சை வருகை ஏற்பாடாகியுள்ளது.  அதற்கான அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே தஞ்சை சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக கருப்பு முருகானந்தம் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் தொகுதிகளை கண்டறிவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதன் காரணமாகவே ஜே.பி.நட்டாவின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: