×

எதிலும் வெற்றி நடை போடல எத்தியோப்பியாவை விட தமிழகம் கேவலமாக இருக்கு: கமல்ஹாசன் ஆவேசம்

அம்பத்தூர் நகர மக்கள் நீதி மய்யம் சார்பில் நகர செயலாளர் சந்தானம் தலைமையில் நடந்த பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது: தமிழகம் வெற்றி நடைபோடுகிறது என முதல்வர் விளம்பரம் செய்கிறார். எங்கே வெற்றி நடைபோடுகிறது என நான் கூகுளில் தேடி பார்த்தேன், எத்தியோப்பியா நாடு வரை போய் நிற்கிறது. அந்த நாடு எவ்வளவு கேவலமாக இருக்கிறதோ, அதை விட கேவலமாக தமிழகம் உள்ளது. இதிலிருந்து தமிழகம் மீள வேண்டும். பழமை, பெருமையை பேசிக்கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை. அதனை நிகழ்த்தி காட்ட வேண்டும். ரூ.2.5 லட்சம் கோடிக்கு முதலீடு வந்து உள்ளதாக கூறியுள்ளனர். ஆனால், இளைஞர்கள் வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பெண் போலீஸ் அதிகாரிக்கே பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறது என்றால், உங்களுக்கு என்ன கதி நடக்கும். மந்திரிகள் லஞ்சம் வாங்காமல் இருந்திருந்தால், 2 தமிழ்நாட்டை சுபிட்சமாக வைத்திருக்க முடியும். மத்திய அரசை பற்றி பார்த்து பேசுங்க, இல்லன்னா ரெய்டு விட்டுருவாங்க என்ன சொல்றாங்க. நானே ரெய்டு பண்ணனும்னு அலைஞ்சிட்டு இருக்கேன். அம்பானி, அதானியை அமித்ஷாவுக்கு பிடித்திருக்கிறது. அதைவிட, அவருக்கு மக்களையும் பிடித்திருக்க வேண்டும். பணக்காரர்களுக்கு பணிந்து, அரசும் அதிகாரமும் மக்களை ஆட்டிப்படைக்கிறது.Tags : Tamil Nadu ,Ethiopia ,Kamal Haasan , Kamal Haasan is angry that Tamil Nadu is more disgusting than Ethiopia
× RELATED ஊன்றுகோல் உதவியுடன் வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்ட கமல்ஹாசன்