திமுக மாவட்ட செயலாளர் தாயார் காலமானார்

திருவொற்றியூர்: சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏவின் தாயார் எஸ்.அன்னம்மாள் (87), மாதவரம் அண்ணா தெருவில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த இவர் நேற்று மதியம் உயிரிழந்தார். இவரது உடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.இன்று மாலை 3 மணிக்கு இவரது உடல் மந்தைவெளி தெருவில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது. 

Related Stories:

>