×

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு தபெதிக ஆதரவு: கோவையில் கு.ராமகிருட்டிணன் பேட்டி

கோவை: தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில செயற்குழுக் கூட்டம் கோவை காந்திபுரம், பெரியார் படிப்பகத்தில் நேற்று நடைபெற்றது. பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். அப்போது அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் 100 ஆண்டுகளாக திராவிட இயக்கத்தால் போராடி பெற்ற சமூகநீதி, மாநில உரிமைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி, மத்தியில் ஆளும் பாஜ ஆட்சியாலும், அடிமை அரசாக செயல்படும் அதிமுக ஆட்சியாலும் பறிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் மத வெறியை உருவாக்கும் பாஜவின் இந்துத்துவ அரசியலுக்கு துணைபோகும் அதிமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற தமிழர்களின் நலனை பாதுகாத்திட, இழந்த உரிமைகளை மீட்க வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கி இருப்பது அண்ணாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் அதிமுக அரசு செய்த மாபெரும் துரோகம்.  திமுக கூட்டணி வெற்றி பெற தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவோம். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.

Tags : Ramakirutanan , In the Assembly elections Tabitha support for DMK alliance: Interview with K. Ramakrishnan in Coimbatore
× RELATED கர்ணன் கொண்டாட வேண்டிய படம்...